கைது செய்யபட்டார் வனிதா - சொந்த மகளையே கடத்த என்ன காரணம் - அதிர்ச்சி தகவல்கள்..!


இரண்டு திருமணம் செய்து விவாகரத்து செய்து விட்டு மூன்றாவதாக ஒரு கணவனுடன் திருமணமே செய்யாமல் வாழ்ந்து மூன்று குழந்தைகள் பெற்ற பிறகும் தனது சொந்த மகளையே வனிதா ஏன் கடத்தினார் என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. 

பிரபல நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் தான் வனிதா விஜயகுமார். விஜயகுமாரின் மகள் என்ற போர்வையில் முதல் முறையாக சினிமாவில் நடிக்க வந்த விஜயகுமாரின் வாரிசும் இவர் தான். 

தன்னுடைய 22 வயதில் ஹீரோயினாக நடிகர் விஜய்க்கு ஜோடியாக அறிமுமான இவரால் திரையுலகில் தொடர்ந்து பயணிக்க முடியவில்லை. படவாய்புகள் கிடைக்கும் கிடைக்கும் என காத்திருந்து காலம் போனது தான் மிச்சம்.

இதனால், சினிமாவை விட்டு விலகி கடந்த 2000ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரை நடிகை வனிதா திருமணம் செய்து கொண்டார். இது பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைத்த திருமணம். இந்த திருமணத்தின் மூலம் வனிதாவிற்கு இரண்டு குழந்தகள் பிறந்தன. 

கணவனுடன் ஏற்பட்ட சண்டை சச்சரவு காரணமாக 2005ம் ஆண்டு வனிதா ஆகாஷிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.அடுத்த இரண்டே வருடம் கழித்து 2007-ம் ஆண்டு ஆந்திராவை சேர்ந்த ஆகாஷ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இப்போது தான் பிரச்சனை ஆரம்பித்தது. மனகசப்பு காரணமாக நடிகர் விஜயகுமாரின் சொத்தில் பங்கு தர முடியாது என மறுத்து விட்டார்.

Share it with your Friends