பிக்பாஸ் வீட்டில் மதுமிதா நடிக்கிறார் - பிரபல சீரியல் நடிகை விளாசல்


பிக்பாஸ் சீசன் 3 வீட்டில் உள்ள ஜாங்கிரிமதுமிதா அடிக்கடி கடவுளை வணங்குவது அடிக்கடி தேம்பி தேம்பி அழுவது என தொடர்ந்து செய்து வருகிறார்.

ஆனால் மதுமிதா முழுவதும் நடிக்கிறார் என கூறி மதுமிதாவை சண்டைக்கு இழுத்துள்ளார் குணச்சித்திர நடிகை தீபா.

பிரபலமான பல சீரியல்களில் நடித்துள்ள இவர் இதுகுறித்து கூறுகையில், பிக்பாஸில் மதுமிதா அக்கா பேசுவது சரியானது தான். ஆனால் அவர் எந்த இடத்தில், யார் முன் பேசுகிறார் என்பதை பார்க்க வேண்டும்.

ஏனென்றால் வெளிநாடுகளில் வாழ்பவர்கள் மாடர்னாக தான் உடை அணிவார்கள். மதுமிதா காலையிலேயே கடவுளிடம், வீட்டில் தப்பை தட்டி கேட்கும் தைரியத்தை கொடு என வேண்டுகிறார். இதை பார்க்கும்போது இவர் மக்கள் மனதில் இருப்பதற்காக நடிக்கிறாரோ என்று தோன்றுகிறது என விளாசியுள்ளார்.