அப்டி ஓரமா போய் நில்லு..! - முன்னணி பேட்ஸ்மேனை தூக்கியடித்த கோலி.! - இன்றைய போட்டியில் அதிரடி மாற்றம்..!


உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் போட்டிகளில் இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள இந்த அணி ஐந்தில் வெற்றியும் ஒன்றில் தோல்வியும் மற்றொரு போட்டி முடிவு எட்டப்படாமலும் தடைபட்டது. 

ஏழாவது போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததன் மூலம் பாக், ஸ்ரீலங்கா, வங்க தேச அணிகளின் அரையிறுதி கனவு தகர்ந்தது. இந்நிலையில், எட்டாவது போட்டியாக இன்று வங்கதேச அணியுடன் மோதுகின்றது இந்திய அணி. 

வங்கதேச அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. ஆஃப்கான் அணி காட்டிய சாவு பயத்தை இந்திய அணி இன்னும் மறக்கவில்லை. அஜாக்ரதையாக இருப்பது அணியின் தோல்விக்கு வழி வகுத்துவிடும் என்பதை கேப்டன் கோலி நேரடியாவே கூறிவிட்டார்.

இதனை தொடர்ந்து அணியில் அதிரடி மாற்றம் ஒன்று செய்யபட்டுள்ளது.