பிகில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இந்த படத்தின் காப்பி தான் - தயாரிப்பு நிறுவனமே வெளியிட்ட புகைப்படம்...!


இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் பிகில் படத்தின் போஸ்டர்கள் விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகின. நீண்ட நாள் எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்ததற்கு போஸ்டரை ரசிகர்கள் கொண்டாடி விட்டனர். 

இதனை தொடர்ந்து, சில தினங்களுக்கு முன்பு படக்குழு இந்த படத்தில் விஜய் பாடுகிறார் என்ற தகவலை வெளியிட்டது. 

இந்நிலையில், AGS நிறுவனம் தங்களது டுவிட்டர் பக்கத்தில் பிகில் பட ஒரு போஸ்டரில் விஜய் கொடுத்த போஸ் அவரது பழைய படம் ஒன்றில் அப்படியே இருக்கும், அது எந்த படம் என கேள்வி கேட்டுள்ளனர். 

அதற்கு ரசிகர்கள் பலரும் சரியான பதில் கொடுக்க அவர்களும் விஜய்யின் திருமலை படத்திலும் இதே போஸ் என இரண்டு போஸ்டர்களையும் போட்டுள்ளனர்.
Share it with your Friends