படுத்துவிட்ட மார்கெட் - அட்ஜஸ்ட் செய்து ஆட்டத்திற்கு தயாரான நடிகை..!


செவத்த நடிகையின் மார்கெட் கிட்டதட்ட முழுதும் படுத்துவிட்டது. சமீபத்தில் வெளியான அவரது படத்தை பார்த்தவர்கள் நடிகையை பாராட்டோ பாராட்டு என்று பாராட்டினார்கள். ஆனால், வெறும் பாராட்டை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும். பட வாய்ப்புகள் தொடர்ந்து வரவில்லையே. 

அம்மணியை விட இளைமையான நடிகைகள் களம் இறங்கிவிட்ட நிலையில், அவர்களுக்கு தான் வாய்புகள் தேடி செல்கின்றன. சம்பளம் கொடுப்பதை வாங்கி கொண்டு நடிக்கிறார்கள் சமீபத்தில் அறிமுகமான ராஷியான நடிகையும், ராஷ்மியான நடிகையும். 

இதனால் முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகள் இவர்கள் தேடி தான் செல்கின்றது. தமிழில் இரண்டாம் கட்ட ஹீரோக்களுடன் நடிக்க மனமில்லாத நடிகை பாலிவுட் பக்கம் சென்றுள்ளார். அங்கே, வில்லன் நடிகருக்கு ஜோடியாக ஒரு வாய்ப்பு வர மறுக்காமல் ஒப்புக்கொண்டார். 

என்னம்மா வில்லன் நடிகர் கூட ஜோடி போட ஒகே செல்லிட்ட என்று கேட்டால் அந்த படத்தின் கதை மற்றும் என்னுடைய கதாபாத்திரம் வெயிட்டாக இருந்தது அதனால் தான் ஒப்புக்கொண்டேன் என்கிறார். அது சரி, மார்கெட் காலியாகிடுச்சு-னு ஒப்புக்கொள்ளவா முடியும். 

Share it with your Friends