தல, தளபதி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய "பிகில்" பிரபலம்..!


இயக்குனர் அட்லிகுமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் பிகில் படம் வரும் தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது. முன்னதாக சுதந்திரதினத்தன்று பாதுகாப்பாக வைப்பட்டுள்ள பிகில் படத்தின் பாடல்களுக்கு விடுதலை அளிக்கவுள்ளது படக்குழு. 

மெர்சல் படத்தை போன்று பிகில் படத்திற்கும் இசை வெளியீட்டு விழா நடைபெறும் சொல்லப்பட்டு வருகிறது. விஜய் இப்படத்தில் வெறித்தனம் என்ற பாடலை பாடுகிறார் என்ற அப்டேட்டை அண்மையில் வெளியிட்டு ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.


அது குறித்த புகைப்படமும் வெளியானது. இதில் பாடலாசிரியர் விவேக், விஜய், இயக்குனர் அட்லீ, இசையமைப்பாளர் ரஹ்மான் ஆகியோர் இருந்தனர்.

பாடலிசிரியரை விடாமல் ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். சமூகவலைதளத்தில் அவரையும் அதிகமான எண்ணிக்கையில் ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள்.


இந்நிலையில் அவர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதில் கிரிக்கெட் வீரர் தல தோனியின் உருவ போர்டு அருகே நின்று போஸ் கொடுத்துள்ளார்.