அரையிறுதிக்குள் பாக்கிஸ்தான் நுழையும் வாய்ப்பு..! - ஆரம்பமே அசத்தல்..!


உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் 43-வது ஆட்டம் உலக கிரிக்கெட் ரசிகர்களால் உற்றுநோக்கப்படுகின்றது. காரணம், இன்றைய போட்டியில் மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் பாக் வெற்றி பெற்றால் அரையிறுதிக்குள் நுழைந்து விடும். 

வங்கதேசம் ஜெயித்தாலும் தோற்றாலும் வெளியே தான். அதனால், பாக்கிஸ்தானுக்கு வங்கதேசம் வாய்பை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

அந்த வகையில்,இன்றைய போட்டியில் பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தால் தான் அது சாத்தியம் என்றுநாம் கூறியிருந்தோம். அதே போல டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது பாகிஸ்தான். 


பாக்அணியின்கேப்டன் இன்று நாங்கள் 500 ரன்கள் அடிப்போம் என்றும் அதற்கு அல்லாஹ் துணையிருப்பார் என்றும் பகிரங்கமாக கூறினார். பாக்கிஸ்தான் 500 ரன்களை அடிக்கும் பட்சத்தில் வங்க தேச அணியை 150 ரன்களுக்குள் ஆல் அவுட் செய்யவேண்டும். 

அப்படி செய்தால் பாகிஸ்தான் அரையிருதிக்குள் நுழையும். மேஜிக் மொமென்ட் நடக்குமா..? என்பதை பொறுத்திருந்து பாப்போம்.

இந்நிலையில், பாக் ரசிகர் ஒருவர் எல்லோரையும் பகீர் ஆக்கும் வகையில் ஒரு ஸ்கோர் கார்டை எடிட் செய்து தனது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளார் பாருங்க.
Advertisement

Share it with your Friends