முருகதாஸிற்கு இருக்குற பிரச்சனை பத்தாது என எஸ்.பி.பி வேற..!


இயக்குனர் முருகதாஸ்நடிகர் ரஜினியை வைத்து தர்பார் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் பிரபல பாடகர் எஸ்.பி.பி ஒரு பாடலை பாடியுள்ளார்.

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் பேட்ட படத்தை போல இரண்டு வரிகளை மட்டும் எஸ்.பி.பிக்கு கொடுக்காமல் முழு பாடலையும் கொடுத்துள்ளார் என்று கூறப்படுகின்றது. 

ஏற்கனவே, தர்பார் படப்பிடிப்பு தளத்தில் இருந்து அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோக்கள் என வெளியாகி படககுழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது. 

படக்குழுவில் உள்ள யாரோ ஒருவர் தான் இந்த வேலைகளை செய்கிறார் என்று பெரும் குழப்பத்தில் இருக்கிறார் முருகதாஸ். இதனால், படப்பிடிப்பு தளத்தில் கடுமையான கெடுபிடி என்று நம் தளத்திலேயே கூறியிருந்தோம்.

ஆனால், எஸ்.பி.பி செய்துள்ள ஒரு வேலை தான் முருகதாஸின் டென்ஷனை அதிகமாகியுள்ளது.