கீர்த்தி சுரேஷின் படத்தை பாதிக்கு மேல் பார்க்க முடியவில்லை - பிரபல நடிகை பேச்சு - கடுப்பில் ரசிகர்கள்


இளம் நடிகை கீர்த்தி சுரேஷின் சினிமா பயணத்தில் மைல் கல்லாக அமைந்த படம் மகாநதி. பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகியிருந்த இப்படம் தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியாகியிருந்தது.

கீர்த்தி சுரேஷுடன் மலையாள நடிகர் துல்கர் சல்மான், சமந்தா, விஜய் தேவரகொண்டா உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் ரிலீஸாகி ஒரு வருடம் நிறைவடைந்துவிட்டது.


இந்த படத்தில் நடத்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என நடிகை கீர்த்தி சுரேஷ் கூறுகிறார். இந்நிலையில், பழம் பெரும் நடிகையான வாணிஸ்ரீ இந்த படம் குறித்து பேசியது கீர்த்தி சுரேஷ் ரசிகர்களை மிகவும் கோபப்படுத்தியுள்ளது. 

கீர்த்தி சுரேஷின் நடிகையர் திலகம் படத்தை பாதிக்கு மேல் என்னால் பார்க்க முடியவில்லை. தூங்கிவிட்டேன் என்று கிண்டலாக பேசியுள்ளார். இது தான் கீர்த்தி சுரேஷின் ரசிகர்களின் கோபத்திற்கு காரணமாக அமைந்து விட்டது.