காலா பட நடிகை வெளியிட்ட புகைப்படம் - திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.!


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த வருடம் வெளியாக மிகபெரிய வெற்றி பெற்ற 'காலா' திரைப்படத்தில், ரஜினியின் முன்னாள் காதலி கதாப்பாத்திரத்தில் நடித்து, கோலிவுட் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நடிகை ஹீமா குரேஷி. 

பாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ள இவர், அங்கு அரை குறை உடையுடன், மாடர்ன் ரோல்களில் நடித்திருந்தாலும், 'காலா' படத்தில் 40 வயதை கடந்த பெண் வேடத்தில், புடவை மூக்குத்தி என தமிழ் பெண் போல் நடித்தார். 'காலா' படத்திற்கு பிறகு, தற்போது பல படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் அம்மணி. 

எந்தவொரு சர்ச்சையும் இல்லாமல் சினிமாவில் பயணித்து வந்த இவர் சர்ச்சையில் சிக்க வேண்டும் என்றே ஒரு காரியத்தை செய்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் அவரை திட்டி தீர்த்து வருகிறார்கள்.
ஆம், ஓட்டல் ஒன்றின் சமயலறையில் தன்னுடைய காலை தூக்கி வைத்து ஷூ லேஸ் கட்டுவது போல போஸ் கொடுத்துள்ளார். சமைக்கும் இடத்தில் இப்படித்தான் காலை தூக்கி வைப்பீர்களா.? என்று விளாசி தள்ளி வருகிறார்கள் ரசிகர்கள்.