"நேர்கொண்ட பார்வை" சென்சார் ரிசல்ட் - படம் பார்த்தவர்கள் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க..?


நடிகர் அஜித்தின் ‛விஸ்வாசம்' வெற்றிக்கு பிறகு இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளியாகும் படம் ‛நேர்கொண்ட பார்வை'. நடிகை வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, டெல்லி கணேஷ் நடித்துள்ளனர். 

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பிங்க் ஹிந்தி ரீ-மேக்கான இதை, வினோத் இயக்க, ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்த படம் தணிக்கைக்காக சென்றது. படத்தை பார்த்த அதிகாரிகள் எந்த காட்சியையும் நீக்காமல் "U/A" சான்று வழங்கி உள்ளனர்.மேலும், பிங்க் படத்திலிருந்து இந்த படம் பல விஷயங்களில் வேறுபட்டு இருக்கிறது. தமிழ் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் என்று தணிக்கை குழு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.