இயக்குநர் தலையில் குண்டை தூக்கி போட்ட வம்பு நடிகர்..!


வம்பு நடிகர் தொடர்ந்து பல சர்ச்சைகளை சிக்கி தனது மார்க்கெட்டை குறைத்து கொண்டார். இந்நிலையில், சீட்டாட்டம் பட இயகுநரின் படத்தில் அரசியல் கூட்டம் என்ற படத்தில் நடிக்கவிருந்தார் வம்பு. 

இந்நிலையில், மலைப்பகுதியில் முதல் கட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளார் இயக்குநர். படத்தை பிரமாண்டமாக எடுப்பதால் நூற்றுக்கணக்கான ஜூனியர் ஆர்டிஸ்டுகளை ஒப்பந்தம் செய்துள்ளார்.

இங்கு தான் வம்பு தன்னுடைய வேலையை காட்டியுள்ளார். ஞாயிற்றுக்கிழமைகளில் நான் வேலை செய்ய மாட்டேன் என்று கூறி இயக்குநரின் தலையில் குண்டை தூக்கிப் போட்டுள்ளார்.

ஹீரோ வந்தாலும், வரவில்லை என்றாலும் ஜுனியர் ஆர்டிஸ்ட்களுக்கு சம்பளம் தரணுமா இல்லையா..? கேமரா மேனுக்கு சம்பளம் தரணுமா இல்லையா.? யூனிட்டில் உள்ள மற்ற அனைவருக்கும் சம்பளம் தரணுமா இல்லையா..? இப்போது இந்த அனைத்து சம்பளமும் நஷ்டம் தான். 

காரணம், ஹீரோ ஒருவர் வரவில்லை என்பதற்காக வேலைக்கு வந்தவர்கள் சம்பளம் வேண்டாம் என்று சொல்லிவிடுவார்களா..? இப்படி, தயாரிப்பாளரின் கஷ்டத்தை புரிந்து கொள்ளாமல் இப்படி நடந்துகொள்கிறாரே ஹீரோ என்று புலம்புகிறார் இயக்குநர்.
Share it with your Friends