இயக்குனர் முருகதாஸின் அடுத்த படத்தின் ஹீரோ இவர் தான்.! - ரசிகர்கள் ஷாக்..!


ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்பார்' படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருக்கும் படத்தில் டோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுன் நடிக்க இருக்கிறார். 

அல்லு அர்ஜுன் நடித்த தெலுங்கு படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி வருகின்றன என்றாலும் இதுவரையிலும் அல்லு அர்ஜுன் நேரடி தமிழ்ப்படத்தில் நடித்ததில்லை. சில வருடங்களுக்கு முன் லிங்குசாமி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ஒரு நேரடித் தமிழ் படத்தில் நடிப்பதாக இருந்தது. 

இந்த படத்தின் அறிவிப்பு விழா சென்னையிலுள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் ஆடம்பரமாக நடைபெற்றது. ஆனால் அந்த அறிவிப்புக்கு பிறகு அந்த படத்தை எடுக்கும் திட்டம் கைவிடப்பட்டது. அதனால் சற்றே வருத்தப்பட்ட அல்லு அர்ஜுனுக்கு நேரடி தமிழ்ப் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாளாக நிறைவேறாமலே இருந்தது. 


அல்லு அர்ஜுனின் அந்த ஆசையை புரிந்து கொண்ட ஏ.ஆர்.முருகதாஸ் அவரது ஆசையை நிறைவேற்ற இருக்கிறார். தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழிகளில் உருவாக இருக்கும் இந்தப் படத்தை 'கலைப்புலி' எஸ்.தாணு தயாரிக்கிறார். தெலுங்கு வெர்ஷனை முன்னணி தெலுங்குப்பட நிறுவனத்திடம் கைமாற்றிவிட்டுவிட்டார் தாணு. 

ஏற்கெனவே தெலுங்கின் முன்னணி ஹீரோக்களான சிரஞ்சீவி, மகேஷ் பாபு ஆகியோரை வைத்து படங்களை இயக்கியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். அந்த வரிசையில் இப்போது அல்லு அர்ஜுனும் இடம்பெற உள்ளார். 

இறுதியாக அவர் இயக்கிய தெலுங்கு படமான "ஸ்பைடர்" திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல்நஷ்டத்தை சந்தித்தது. இந்நிலையில், மீண்டும் தெலுங்கில் உள்ள முன்னணி ஹீரோவுடன் முருகதாஸ் கைகோர்க்கவுள்ளது ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.
Share it with your Friends