யாரு சொல்லி வனிதா இந்த ஆட்டம் ஆடுகிறார் - போட்டு உடைத்த ஃபாத்திமா பாபு


நடிகை வனிதா விஜயகுமார் பிக்பாஸ் வீட்டில் செய்யும் அராஜகங்கள் கொஞ்சமா..? நஞ்சமா..?. இவர் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இருக்கிறார். இவர் வெளியே செல்ல வேண்டும் என மக்கள் விரும்பினாலும் பிக்பாஸ் விரும்ப மாட்டார். அதனால், இந்த வாரம் மோகன் வைத்யா தான் பலியாடு என்று நாம் முன்னரே சொல்லியிருந்தோம். 

இந்நிலையில், முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட ஃபாத்திமா பாபு நடிகை வனிதாவின் நடவடிக்கைகள் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, வனிதா தனக்கு எல்லாமே தெரியும் என்ற எண்ணம் கொண்டவர்.புறம் பேசுவது என்றால் அவருக்கு அவ்வளவு ஆனந்தம். மற்றவர்களை தரம் தாழ்த்தி பேசுவதும். தன்னை தானே உயர்த்தி பேசிக்கொள்வதும் அவருக்கு அலாதி பிரியம்.

வேறு மொழி பிக்பாஸ் நிகழ்சிகளில் கலந்து கொண்ட அவரது நண்பர்கள் அவருக்கு பிக்பாஸ் வீட்டில் இப்படிதான் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அதன் படி தான் அவர் இப்படி நடந்து கொள்கிறார். கேமராவிற்கு பின்னால் அவரிடம் பேசினால் அவ்வளவு குணமாக பேசுகிறார். ஆனால், கேமரா முன்னாள் வந்து விட்டால் ஆளே மாறிவிடுகிறார்.

அப்போது தான் தன்னை அதிகம் ஃபோகஸ் செய்வார்கள். புதிது புதிதாக கிசுகிசுக்களை உருவாக்கி விடுகிறார். அதற்கு நாம் ஒன்னும் பண்ண முடியாது. வனிதாவை நினைத்தால் எனக்கு தான் கவலையாக இருக்கின்றது.