"பிகில்" தமிழக விற்பனை முடிந்தது - யார் வாங்கியுள்ளார் பாருங்க.! - வியப்பில் கோலிவுட்..!


இயக்குனர் அட்லிகுமார் இயக்கத்தில், இசைப்புயல் ஏஆர்.ரஹ்மான் இசையமைப்பில், நடிகர் விஜய், நடிகை நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் படம் 'பிகில்'. 

விஜய் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த மாதம் இப்படத்தின் மூன்று போஸ்டர்கள் வெளியாகின. மூன்று போஸ்டர்களுமே விஜய் ரசிகர்களை முற்றிலுமாக திருப்திப்படுத்தியது. 

அந்த போஸ்டர்கள் வெளியாவதற்கு முன்பே படத்தின் தமிழ்நாட்டு உரிமை பற்றிய வியாபாரப் பேச்சுவார்த்தை ஆரம்பமானது. தற்போது ஸ்கிரீன் சீன் நிறுவனம் 'பிகில்' படத்தின் தமிழ்நாடு உரிமையை வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். 

விஜய்யின் முந்தைய படங்களைக் காட்டிலும் இந்தப் படத்தின் தமிழ்நாடு உரிமை விலை அதிகம் என்று சொல்கிறார்கள்.