சர்ச்சையை கிளப்பிய ஆடை படத்தின் ட்ரெய்லர் - வீடியோ உள்ளே


பிரபல நடிகை அமலாபால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஆடை’. இப்படத்தை ‘மேயாத மான்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ரத்னகுமார் இயக்கியுள்ளார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேபோல் சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த டீசரில் அமலா பால் நிர்வாணமாக காட்சிகள் இடம்பெற்றதால் பரபரப்பாக பேசப்பட்டது. 
இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் கஷ்யப் இன்று வெளியிட்டார். பெட் கட்டுறீயா என்று தொடங்கும் இந்த டிரைலர் தற்போது ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ட்ரெய்லரில் எல்லோரும் பிறக்கும்போது ஆடையுடனா பிறந்தோம். எல்லோருடைய ஆடையையும் கழட்டிவிட்டால் அதுதான் உண்மையான பர்த்டே ட்ரஸ்எ ன்று கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Share it with your Friends