அடக்கடவுளே..! சாய் பல்லவி பற்றி இப்படி பேசுறாங்களே..!


மலர் டீச்சர்-ல் இருந்து ரௌடி பேபியாக ப்ரமோஷன் ஆகியுள்ளார் சாய்பல்லவி. இவர் நடிப்பில் வெளியான முதல் தமிழ்ப்படம் "தியா" வந்த இடமும் போன தடமும் தெரியாமல் போனது. 

இதனால் நீண்ட நாள் களித்து  மாறி 2 படத்தில் நடித்தார். படம் நல்ல வரவேற்பை பெற்றது. முன்னதாக தெலுங்கில் பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார் சாய் பல்லவி.

ஆனால், முன்னணி ஹீரோக்கள் சாய் பல்லவியின் பெயரை கேட்டாலே தெறித்து ஓடுகிறார்கள். காரணம், இவரின் மீது இருக்கும் தலைக்கனம் பிடித்தவர் இமேஜ் தான். 

படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வதற்கு முன்பு ஆயிரத்தெட்டு கண்டிஷன் போடுகிறாராம் அம்மணி. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டுமே நடிப்பேன் என்று நாலு பாட்டுக்கு மரத்தையும், ஹீரோவையும் சுற்றி வரும் கதாபாத்திரம் என்றால் என்னை விட்டுவிடுங்கள் என்றும் ஒரே போடாக போடுகிறாராம்.