சதி வலையில் அஜித்தின் படம் - என்ன நடக்குது பின்னாடி..!


நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர். தமிழ் சினிமாவிலேயே மிகப்பெரிய ஒப்பனிங் யாருக்கு என்றால் அது அஜித்திற்கு தான் என்று அடித்து சொல்லலாம். 

இந்நிலையில், இவர் நடிப்பில் உருவாகியுள்ள "நேர்கொண்ட பார்வை" திரைப்படம் ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாகவுள்ளது. படம் டார்க் மோடிலேயே எடுக்கபட்டுள்ளது போல் தெரிகின்றது.  இப்படத்தை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

ஆனால், இப்படத்தை இன்னும் சில விநியோகஸ்தர்கள் வாங்கவில்லை என ஒரு பத்திரிகையாளர் கூறியுள்ளார். இதுக்குறித்து மேலும் அவர் கூறுகையில் ‘போனிகபூருடன் அஜித் இரண்டு படம் பணியாற்றுகின்றார், இந்த படம் நன்றாக ஓடினால் சரி. அல்லது சுமாராக ஓடினால் கூட இந்த நஷ்டத்தை வைத்து அடுத்த படத்தை இன்னும் குறைவான விலைக்கு வாங்கிவிடலாம்’ என சில விநியோகஸ்தர்கள் கணக்கு போட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.