"வருஷமெல்லாம் வசந்தம் பட நடிகை அனிதா இப்போது செய்கிறார் - சம்பளம் எவ்வளவு தெரியுமா.?"


தமிழில் நடிகர் விக்ரம் நடித்த சாமுராய், படத்தின் மூலம் அறிமுகமானவர் அனிதா. இந்த படத்தை தொடர்ந்து 'வருஷமெல்லாம் வசந்தம்', 'சுக்கிரன்' போன்ற படங்களில் நடித்தார். தமிழ் மற்றும் இன்றி, இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தினார்.

தமிழில் இவருக்கு ஒரு சில படங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனவே ஹிந்தி சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோ போன்றவற்றில் தன்னுடைய கவனத்தை செலுத்தினார். தற்போது, நாகினி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.  இந்நிலையில், பிரபல ஹிந்தி தொலைகாட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் "நச் பாளியே (Nach Baliye)"என்ற நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார். தமிழில் ஹிட்டான ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சி தான் ஹிந்தியின் நச் பாளியே என்ற பெயரில் நடக்கிறது. 

இதனுடைய 9-வது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது. இதில், தான் அனிதா கலந்துகொள்கிறார். இதற்காக, இவருக்கு கோடியில் சம்பளம் பேசப்பட்டுள்ளது என்ற தகவல் இணையத்தில் கசிந்துள்ளன. 

இது குறித்து பேசிய அனிதா, எனக்கு நடனம் என்றால் மிகவும் பிடிக்கும், இதற்கு முந்தைய சீசன்களிலேயே எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. அப்போது நேரம் இல்லாத காரணத்தினால் என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. இப்போது, நேரம் இருக்கிறது. இதனால் ஒப்புக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.
Share it with your Friends