சந்தேகத்தை கிளப்பிய நடிகை ஸ்ரீதேவியின் மரணம் - உண்மை என்ன..? வாயை திறந்த போனி கபூர்


நடிகை ஸ்ரீ தேவி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் அதிகமாக போதை பொருள் பயன்படுத்தியதால், தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டதாக கூறப்பட்ட நிலையில், ஸ்ரீதேவியின் மரணம் குறித்து ஆராய்வதற்காக, கேரள டிஜிபி, தடவியல் நிபுணரான உமாடாதனை நாடியுள்ளார். 

இந்நிலையில், தடவியல் நிபுணர் டாக்டர் உமாடாதன் கூறியதை கேரளா டிஜிபி கூறியுள்ளார். அவர் கூறியதாவது, ஸ்ரீதேவியின் மரணம் ஒரு விபத்து அல்ல என தடவியல் நிபுணர் கூறியதாக கூறியுள்ளார். 


மேலும் அவர் கூறுகையில், நடிகை ஸ்ரீதேவி குடித்து விட்டு, குளியலறையில் மூழ்கியதாகத்தான் கூறப்படுகிறது என்றும், அப்படியே அவர் அதிகமாக குடித்திருந்தாலும், ஒரு அடி உயர தண்ணீரில் மூழ்கியிருக்க முடியாது என்றும், வேறு ஒருவர் அவரது தலையை தண்ணீரில் பிடித்தும் தள்ளினால் தவிர, அவர் மூழ்குவதற்கான வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளார். 

இது குறித்து ஸ்ரீதேவியின் கணவரும், பிரபல தயாரிப்பாளருமான போனி கபூரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், இது போன்ற முட்டாள் தனமான பேச்சுகளுக்கு நான் செவி கொடுக்க விரும்பவில்லை. இது ஒரு தனி மனிதனின் அதித கற்பனையால் உருவானது மட்டுமே. 

ஒரு பிரபலம் எனும் போது இது போன்ற கதைகள் வந்துகொண்டு தான் இருக்கும். அதற்கெல்லாம் பதில் சொல்லவேண்டும் என்ற அவசியம் இல்லை. இது போன்ற கட்டுக்தைகளை நான் கவனிப்பதும் இல்லை என கூறியுள்ளார்.