இணையத்தில் வைரலாகும் விஜயின் ஐ.டி கார்டு..! - "பிகில்" படக்குழுவினர் அதிர்ச்சி..!


வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது "பிகில்" திரைப்படம். இந்த படத்தில் விஜய் பயன்படுத்திய ஐ.டி.கார்டு இணையத்தில் லீக் ஆகியதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

அட்லி இயக்கத்தில் 3வது முறையாக விஜய் நடிக்கும் படத்துக்கு பிகில் என்று பெயரிடப்பட்டுள்ளது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. 

அப்பா, மகன் என இரண்டு தோற்றங்களில் நடித்துள்ள விஜய்யின் இரு வேறு தோற்றங்களும் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது. நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை. ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு, ரூபன் படத்தொகுப்பு மற்றும் டி. முத்துராஜ் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளனர். 

மேலும், துணை நடிகர்களாக மேயாதமான இந்துஜா, நடிகர் சத்யராஜ், நடிகர் கதிர், யோகிபாபு, டேனியல் பாலாஜி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படம் இதோ, 

Share it with your Friends