அதை மயி*னு தூக்கிபோட்டுட்டு போக வேண்டும் - நடிகர் சூர்யா விளாசல்


பிரபல நடிகர் சூர்யா சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி சமூகத்தில் உள்ள பல பிரச்சனைகள் பற்றி வெளிப்படையாக குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது அவர் நீட் தேர்வு மற்றும் புதிய கல்வி கொள்கை பற்றிபேசியுள்ளார். அவர் நடத்திவரும் அகரம் பவுண்டேஷன் விழாவில் பேசிய அவர் 30 கோடி மாணவர்களளை வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக பாதிக்கும் விஷயம் இந்த புதிய கல்வி கொள்கை என கூறியுள்ளார்.


கிராமங்களில் ஒரே ஒரு ஆசிரியர் மற்றும் பத்து மாணவர்களுக்கு கீழ் உள்ள பள்ளிகள் மூடப்படும் என கூறுகின்றனர். அவர்கள் எங்கே போவார்கள்? மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. காடு, மலை, ஆறு கடந்து படிப்பை தொடர்கின்றனர். மேலும், மூன்று வயதிலேயே மூன்று மொழிகளை திணிப்பது மிகவும் தவறு.


30 சதவீத மாணவர்கள் ஆசிரியர்களே இல்லாமல் படிக்கிறார்கள். அவர்கள் எப்படி தேர்வுகள் எழுதுவார்கள். அத்தனை தேர்வுகளை தாண்டி, அதை மயி*னு தூக்கிபோட்டுட்டு போக வேண்டும் . கெட்ட வார்த்தை பேசியதற்கு மன்னிச்சுடுங்க, மேலும், இப்போது ஒரு நுழைவு தேர்வு எழுத வேண்டும் என்கிறார்கள். இது, பாடம் கற்பித்தலை நிறுத்திவிட்டு அனைத்து பள்ளிகளும் இனி கோச்சிங் சென்டர்களாக மாறிவிடும் மிகவும் கோபமாக பேசியுள்ளார் நடிகர் சூர்யா..