நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி - தயாரிப்பாளரே கூறிய தகவல்..!


நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தை தல அஜித் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருகிறார்கள். 

இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நேர்கொண்ட பார்வை திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி திரைக்கு வருவதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கைபட்டு வந்தது. 

ஆனால்,  விநியோகஸ்தர்கள் படத்தை கொஞ்சம் முன்பே ரிலிஸ் செய்ய படகுழுவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.


இந்நிலையில், பிரபல நாளிதழுக்கு தயாரிப்பாளர் போனிகபூர் கொடுத்த பேட்டியில், படம் ஆகஸ்ட் 10-ம் தேதிக்கு முன்னரே திரைக்கு வரும் என கூறியுள்ளார். மேலும், இதை வைத்து பார்க்கையில் எல்லோரும் கூறியது போல் ஆகஸ்ட் 1-ம் தேதி ரிலீஸ் ஆக வாய்புள்ளது என கூறுகிறார்கள்.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என தெரிகின்றது.