சாய் பல்லவியின் பரிதாப நிலை.! - ரசிகர்கள் கவலை..!


மலர் டீச்சராக தோன்றி ரௌடி பேபியாக வளர்ந்திருக்கிறார் நடிகை சாய்பல்லவி. பிரேமம் படத்தில் நடித்த இவரை உருகி உருகி ரசித்தார்கள் தமிழக ரசிகர்கள். 

தமிழ் படங்களில் மட்டும் இவர் நடித்தால் ஓஹோ என்று வருவார் என்று சொன்னார்கள். ஆனால், நடந்ததோ வேறு.மலையாளம், தெலுங்கில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் சாய்பல்லவி. தமிழில் மண்ணை கவ்வியது தான் மிச்சம். 

தமிழில் இவர் நடித்த தியா, மாரி 2, என்.ஜி.கே என அனைத்து படங்களும் தோல்வி. ஹாட்-ட்ரிக் ப்ளாப் படங்களில் நடித்துவிட்டு இப்போது தமிழே வேண்டாம் பா சாமி என தெலுங்கு படங்களில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். 

இதனால் இனி தமிழ் படங்களில் நடிப்பது சந்தேகம் தான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இதனால், கவலையில் ஆழ்ந்துள்ளனர் ரௌடி பேபி ரசிகர்கள்..!