இன்றைய போட்டியில் இது நடந்தால் பாகிஸ்தான் அறையிறுதிக்குள் நுழைந்து விடும்..!


உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி உச்ச கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. நேற்று முன் தினம் போட்டியில் நியூசிலாந்தை 119 ரன்கள் வித்தியாசத்தில் தோற்க்கடித்து இங்கிலாந்து அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

இரண்டு போட்டிகளில் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற சூழ்நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளை வீழ்த்தி தொடர்ந்து இரண்டு வெற்றிகளை பெற்றுவிட்டது இங்கிலாந்து. 

ஆனால், அரைஇறுதிக்குள் வருவதற்கு பாகிஸ்தானுக்கு இன்னமும் வாய்ப்பு உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். என்ன நடந்தால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெரும் என்ற விபரங்களை இங்கே கொடுத்துள்ளோம். 


இனிமேல் ஜெயித்தாலும் தோற்றாலும் அரையிறுதிக்குள் செல்ல முடியாது என்பதால் வங்கதேச அணி பாக்கிஸ்தானுக்கு வாய்ப்பு கொடுத்தாலும் கொடுக்கலாம் என்கிறார்கள் கிரிக்கெட் வல்லுனர்கள். 

இன்று நடைபெறவுள்ள வங்கதேசம் vs பாகிஸ்தான் போட்டியில் என்ன நடந்தால் பாக் அரையிறுதிக்குள் செல்லும். வாங்க பாக்கலாம்..