அண்ணன் கேட்ட ஒரு கேள்வி - கொன்று வீட்டிற்குள் புதைத்த தம்பி..! - நகையில் கொடூர சம்பவம்..!


நாகர்கோவிலில் உள்ள கூழையாறு என்ற கிராமத்தை சேர்ந்த முருகதாஸன் என்பவருக்கும் கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுக்குப்பம் என்ற பகுதியை சேர்ந்த சுமிதா என்ற பெண்ணுக்கும் 2001 -ம் ஆண்டு பெரியோர்களால் நிச்சயிக்கபட்ட திருமணம் நடந்துள்ளது. 

இதனை அடுத்து இருவரும் கடலூர் துறைமுகம் பகுதில் உள்ள சிங்காரத்தோப்பு என்ற கிராமத்தில் 2இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளனர். 

நிலைமை இப்படியிருக்க, கணவன் முருகதாஸன் வேலை செய்வதற்காக சவுதிக்கு சென்றுள்ளார். ஆறு மாததிக்று ஒரு முறை ஒரு வருடாதிற்கு ஒருமுறை என வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். 

இதனால் முருகதாஸனின் தம்பி சுமேர் என்பவர் இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த அண்ணி சுமிதாவுக்கு ஒத்தாசையாக இருந்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில், முருகதாஸனின் தம்பி சுமேருக்கும் அவரது மனைவி சுமிதாவுக்கு நெருக்கம் அதிகமாகி அவர்களை தகாத பாதைக்கு இட்டுச்சென்றுள்ளது.  

இதனிடையே கடந்த 2013 -ம் ஆண்டு முருகதாசன் நாடு திரும்பியுள்ளார். இதனை அடுத்த சில நாட்களில் முருகதாசன் காணமல் போயுள்ளார். இதனால் முருகதாசன் மீண்டும் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டதாக அவரது உறவினர்கள் நினைத்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து சுமிதாவும், சுமேரும் காணமல் போயுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த முருகதாசனின் தாயார் மூத்த மகன் முருகதாஸனின் பாஸ்போர்ட் வீட்டில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.