காருக்குள் இப்படியெல்லாமா போஸ் கொடுப்பார்கள் - திரிஷாவை விளாசும் ரசிகர்கள்...!


திரிஷா சினிமாவுக்கு வந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தமிழ், தெலுங்கில் நம்பர் 1 நடிகையாக வலம் வந்த திரிஷா, பல புதுமுகங்களின் வரவால் அவருடைய மார்க்கெட் டல்லடித்தது. 

அதனால் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிடலாம் என நினைத்தவருக்கு அதுவும் வொர்க்கவுட் ஆகவில்லை. பிறகு தெலுங்கு நடிகர் ராணாவுக்கும் திரிஷாவுக்கும் இடையில் காதல் என தென்னிந்தியாவில் கிசுகிக்க அவர்களோ நாங்கள் இருவரும் நண்பர்கள் என்று சொல்லி எஸ்கேஎப் ஆகினர். 

ஆனால், திரைப்பட விழாக்கள், திரையுலக விழாக்கள், விருதுவிழாக்கள் என அனைத்திலும் இருவரும் ஜோடியாக வந்து சென்றனர். த்ரிஷாவின் திருமணம் பாதியிலே நின்றபோது ராணா – த்ரிஷா பற்றிய காதல் செய்திகள் றெக்கை கட்டி பறக்க பறந்தது. ஆனாலும் மூச்சு கூட விடாமல் ரகசியத்தை பாதுகாத்துவந்தார் திரிஷா.

ஆனால், ராணா-திரிஷா காதலும் ரொம்ப நாள் நிலைக்கவில்லை. இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திரிஷா காதலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் அமெரிக்கா பறந்து விடுகிறார் அம்மணி. 

இந்நிலையில், காருக்குள் அமர்ந்தபடி குடை பிடித்து கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றை வெளிட்டுள்ள திரிஷாவை பார்த்த ரசிகர்கள், காருக்குள்ளே எதுக்கு குடை..? இப்படியெல்லாமா போஸ் கொடுப்பார்கள்..? என விளாசி வருகிறார்கள்.

Advertisement
Share it with your Friends