அபிராமியை வெளுத்து வாங்கிய வனிதா - கதறி அழும் அபிராமி..!


பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை மதுமிதா அபிராபியிடம் ஒரு பிரச்னையில் மதுமிதா தமிழ்ப்பொண்ணுங்க இபப்டியெல்லாம் பண்ணலாமா என்று கேட்க அது பூதாகரமாக வளர்ந்து வீடே ரணகளமாக மாறியது. 

கடவுள் தான் துணை என மதுமிதா செல்லும் அளவுக்கு அவரை தனிமை படுத்தினார்கள். இதனால்,பெரும்பாலான பிக்பாஸ் ரசிகர்கள் மதுமிதாவின் நிலை கண்டு பரிதாபப்பட்டனர்.

அபிராமிக்கு பிரச்சனை என்றதும் என்ன ஏது என்று கேட்காமல் வானத்துக்கும் பூமிக்கும் குதித்தார் நடிகை வனிதா விஜயகுமார். முதல் நாளில் இருந்தே தான் தான் பிக்பாஸ் என்பது போல அவரது நடவடிக்கைகள் இருக்கின்றன. 

இந்நிலையில், நேற்று எல்லோரும் மதுமிதா வெளியேற விரும்புகிறோம் என்று கூறியபோது, நடிகை அபிராமி மட்டும் மதுமிதா வை கூறாமல் மீராவை கூறினார். 

மேலும், மதுமிதா என்னிடம் வந்து அவராகவே பேசினார். இதனால், அவருடைய குணாதியத்தில் மாற்றம் ஏற்படுவது போல தெரிகின்றது. என்று கூறினார். இதனால் கடுப்பான வனிதா அபிராமியை திட்டினார். உன்னால் தான் நாங்கள் எல்லோரும் மதுமிதாவை கூறினோம். நீ என்னடா னா அவளை நல்லவள் போல தூக்கி விட்டுகிட்டு இருக்க என்று கத்தினார். 

இன்றும் அந்த பிரச்சனை தொடர்கின்றது. இதோ அந்த ப்ரோமோ,   
Share it with your Friends