இத்தனை கோடி ஓட்டுக்களா..? - வாயை பிளந்த கமல்ஹாசன்..!


பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் எதிர்பார்த்ததை விட உச்சகட்ட பரபரப்பில் போய்க்கொண்டிருக்கிறது, முதல் வாரமே பெரும் சண்டைகள், சச்சரவுகள் என அழுகை, உணர்ச்சி வசம் என எல்லோரும் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த வார இறுதியான இன்று அல்லது நாளை யார் வெளியேறப்போவது என்ற எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் கமல்ஹாசன் இன்று வருவதை காண மக்கள் காத்திருக்கிறார்கள்.

தற்போது வந்திருக்கும் புரமோவில் பிக்பாஸ்க்கு 10 கோடி ஓட்டுகள் மக்கள் போட்டிருப்பதாக கூறியுள்ளார்.  ஒருவருக்கு ஒரு நாளைக்கு 50 ஓட்டிகள் வீதம் ஐந்து நாட்களுக்கு 250 ஓட்டுகள் என்ற அடிப்டையில் மொத்தம் நான்கு லட்சம் பேர் ஒட்டு போட்டுள்ளனர். 

இந்த நான்கு லட்சம் பேரை தான் மிகைப்படுத்தி 10 கோடி ஓட்டுகள் என வாயை பிளக்கிறார் கமல்ஹாசன். இந்நிலையில், முதல் வாரமே இப்படி என்றால் ஆச்சர்யம் என்றாலும் வெளியேறப்போவது யார் என்ற எதிர்பார்பு நிலவுகிறது.