இது அட்லி காப்பி இல்ல..! அட்ட காப்பி..! - பிரபல நடிகரின் ஹிட் படத்தின் காப்பியா இந்த போஸ்டர்..!


விஜய்யின் நடிப்பில் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ள பிகில் படத்தை அட்லீ இயக்கியுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ள இப்படத்தில் பெண்களின் கால்பந்து மைய கருத்தாக கூறப்பட்டுள்ளது. 


இந்த பெண்கள் அணிக்கு பயிற்சியாளராக விஜய் நடித்துள்ள நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ட்ராக்காக சிங்கப்பெண்ணே பாடல் வரும் 23ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த அப்டேட்டை அறிவித்த சோனி மியுசிக் நிறுவனம் அப்டேட்டுடன் பெண்கள் கால்பந்து அணியுடன் விஜய் இருக்கும் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டது. ஆனால் இதில் தான் சர்ச்சையே. 

ஏனெனில், இதே ஸ்டைலில் இந்தியில் ஷாருக்கானின் சக்தே இந்தியா பட போஸ்டர் வெளியாகியிருந்தது. இது அட்லி காப்பி இல்ல..! அட்ட காப்பி..! என காலாய்த்து வரும் ரசிகர் போஸ்டர் மட்டும் தான் இப்படியா? அல்லது படம் முழுவதுமே இப்படிதானா? என்பதை படம் வெளியான பின்பு தான் தெரியவரும் என கூறி வருகிறார்கள்.

Advertisement
Share it with your Friends