தர்ஷன் கேட்ட ஒரு கேள்வி - மைக்கை கழட்டி வீசிய வனிதா..!


பிக்பாஸ் சீசன் 3 இன்றைய ப்ரோமோவில் ஒரு டாஸ்கின் நடுவே விதிமுறைய மாற்ற வேண்டும் என்று வனிதா வழக்கம் போல ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார். 

இதனால், கடுப்பான தர்ஷன் போட்டியின் நடுவே எதுக்கு ரூல்ஸை மாத்த சொல்றீங்க...? டாஸ்க் ஆரம்பிக்கும் முன்பே மாற்ற சொல்ல வேண்டியது தானே என்று கூறினார்.

இதனை கேட்ட வனிதா, இப்போ நீ எதுக்கு குறுக்க வந்து பேசுற.. உனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை. உன் வேலையை பாரு என்று கூறுகிறார்.  தொடர்ந்து தர்ஷன் பேச, மைக்கை கழட்டி போட்டுவிட்டு பிக்பாஸிடம் பேசுகிறேன் என்று கிளம்புகிறார் வனிதா.

மற்ற போட்டியாளர்கள் ஏதாவது ஒரு பிரச்னையில் இருக்கும் போது வம்படியாக உள்ளே நுழைந்து அந்த பிரச்னையை ஊதி பெரிதாக்கிவிடும் வனிதா. தன்னுடைய பிரச்சனையில் மற்ற போடியாளர்கள் தலையிட வந்தால், நீங்க பேசாதிங்க என்று ஒரே வார்த்தையில் அமுக்கி விடுகிறார். என்ன ஜென்மமோ என்று திட்டி தீர்த்து வருகிறார்கள் ரசிகர்கள்.

தர்ஷன் கேட்ட ஒரு கேள்வி - மைக்கை கழட்டி வீசிய வனிதா..! தர்ஷன் கேட்ட ஒரு கேள்வி - மைக்கை கழட்டி வீசிய வனிதா..! Reviewed by Tamizhakam on July 11, 2019 Rating: 5
Powered by Blogger.