மீரா மிதுனுக்கு மருத்துவ முத்தம் கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்..! - வைரல் வீடியோ - ரசிகர்கள் விளாசல்


பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய போட்டியாளரான மாடல் அழகி மிரா மினுதுக்கு மோகன்வைத்யா முத்தம் கொடுத்தது நெட்டிசன்களை அதிர்ச்சியாக்கியுள்ளது. 

வீட்டில் கொடுக்கபட்ட டாஸ்க் ஒன்றில் தர்ஷன் மற்றும் சாக்சி விளையாட அந்த டாஸ்க்கிற்கு யாரும் உதவி செய்யக்கூடாது என்று விதி இருந்தும், விதியை மீறி மீராமிதுன் மறைமுகமாக உதவி செய்தார். 

இதனால், சீரியல் நடிகர் கவினுக்கும் மீராவுக்கும் பிரச்சனை வந்தது. மீராவை கவின் 'அறிவிருக்கா' என்று கேட்க இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. ஆளாளுக்கு மீராவுக்கு அட்வைஸ் செய்தனர். அவ்வாறு அட்வைஸ் செய்தவர்களில் ஒருவர் மோகன் வைத்யா. 

மோகன் வைத்யா கொஞ்சம் கடுமையாக மீராவை திட்டினார். இதனால் முதல்முறையாக அதிர்ச்சி அடைந்த மீரா, வழக்கம்போல் தனது அழுகை நாடகத்தை அரங்கேற்றினார்.

இந்நிலையில, மீரா தன்னால்தான் அழுவதாக நினைத்து கொண்டு அங்கு வந்த மோகன் வைத்யா, மீராவை சமாதானப்படுத்தினார். 

மீரா மிதுனுக்கு மருத்துவ முத்தம் கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்..! - வைரல் வீடியோ - ரசிகர்கள் விளாசல் மீரா மிதுனுக்கு மருத்துவ முத்தம் கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்..! - வைரல் வீடியோ - ரசிகர்கள் விளாசல் Reviewed by Tamizhakam on July 02, 2019 Rating: 5
Powered by Blogger.