அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள விராட் கோலி-க்கு வந்துள்ள புதிய சிக்கல்..!


இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பற்றி சொல்லித்தெரிய வேண்டியதில்லை. மைதானத்தில் தன்னுடைய கோபத்தை எக்காரணம் கொண்டும் அடக்கவே மாட்டார். 

ஏற்கனவே, உலகக்கோப்பை தொடரில் ஆஃப்கானுக்கு எதிரான போட்டியில் நடுவர்களை எதிர்த்து பேசியதன் மூலம் ஒரு டீ-மெரிட் புள்ளி, தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நடுவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒரு டீ-மெரிட் புள்ளி  என சம்பாதித்து இப்போது இரண்டு டீ-மெரிட்புள்ளிகளுடன் உள்ளார். 

இதனை மறந்து விட்டு, இந்தியா-வங்கதேச அணிக்கு எதிராக நடந்த உலக கோப்பை போட்டியில் ஒரு Lbw விக்கெட்டிற்கு ரிவ்யூவ் கேட்டார். ஆனால், பந்து பேட்டில் பட்டதா, அல்லது பேடில் பட்டதா என்ற குழப்பம் மூன்றாம் நடுவருக்கு ஏற்பட்டதால் பேட்ஸ்மேனுக்கும் சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. 


மூன்றாம் நடுவர் முடிவு எடுப்பதில் சிக்கல் ஏற்படும் பட்சத்தில் ரிவ்யூவ் ரீடெய்ன் ஆவது வழக்கம். ஆனால், அன்றைய போட்டியில் ரிவ்யூவ் ரீடெய்ன் ஆகவில்லை. இதனால், கடுப்பான விராட் கோலி நடுவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். யார் செய்த புண்ணியமோ அந்த நடுவர் விராட் மீது புகார் ஏதும் கூறவில்லை. 


Share it with your Friends