இந்த முன்னணி நடிகருடன் தொடர்பு என்பதால் தான் என் சினிமா வாழ்க்கைய நாசமா போச்சி - குமுறும் சமிரா ரெட்டி


வாரணம் ஆயிரம் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் சமீரா ரெட்டி. தொடர்ந்து தமிழில் பட வாய்புகள் சொல்லுகொள்ளும் படி கிடைக்காத காரணத்தினால் தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கினார். 

ஆனால், அங்கு தான் அவருக்கு பெரிய சிக்கலே காத்திருந்தது. தெலுங்கில், நடிகர் ஜீனியர் என்.டி.ஆருடன் அஷோக் மற்றும் நரசிம்முடு என்ற இரண்டு படங்களில் தொடர்ந்து நடித்தார். 

மேலும், ஜூனியர் என்.டி.ஆருடன் தான் எங்கு சென்றாலும் சென்று வந்தார். இதனால், இருவருக்கும் தொடர்பு என தகவல் பரவியது. ஆனால், தெலுங்கில் ஜூனியர். என்.டி.ஆரை விட்டால் வேறு யாரையும் தெரியாது என்பதால் தொடர்ந்து அவருடனேயே பயணித்து வந்தார் சமீரா. இதனால், மக்களே இருவருக்கும் தொடர்பு இருப்பது உண்மை தான் போல என பேச ஆரம்பித்து விட்டனர். இதனால், சமீரா-வின் வீட்டில் பிரச்சனை ஏற்பட்டது. மனமுடைந்த சமீரா தெலுங்கு சினிமாவை விட்டே வெளியேறினார். தொடர்ந்து பாலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்த அவர் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். 

இதனை சமீராவே ஒரு பேட்டியில், ஜூனியர் என்.டி.ஆருடன் தொடர்பில் இருந்தேன் என்ற செய்தி பரவியதால் தான் நான் தெலுங்கு சினிமாவில் இருந்தே விலகி விட்டேன் என வேதனையுடன் கூறியுள்ளார்.