பிக்பாஸ் வீட்டில் யாருக்கும் தெரியாமல் தர்ஷனிடம் மீரா மிதுன் செய்த வேலை..!


பிக்பாஸ் நேற்றைய நிகழ்ச்சியில் டாஸ்க் சரியில்லை என்பதால் நடிகை வனிதா விஜயகுமார் மைக்-கை கழட்டி போட்டுவிட்டு போட்டுவிட்டு பிக்பாஸ் கூப்பிடும் வரை நான் மைக்கை மாட்ட மாட்டேன் என்று போட்ட ஆட்டத்தையும். 


வெகு நேரமாகியும் பிக்பாஸ் அழைக்காத காரணத்தினால் மீண்டும் கீழ விழுந்தாலும் மீசையில் மண்னு ஓட்டலை கதையாக தானே மைக்கை எடுத்து மாட்டிக்கொண்டதையும் பார்த்தோம். 

நேற்று வனிதா-வை தர்ஷன் சுருக் சுருக் என சில கேள்வி தோட்டக்களால் வனிதாவை சுட்டுதள்ளினார். இதனால், ஒட்டு மொத்த பிக்பாஸ் போட்டியாளர்களும் தர்ஷனை பாராட்டி பேசினார்கள். 

இடையே, யாரும் பார்க்காத நேரத்தில் தர்ஷனின் கையை பிடித்து "செம்ம.. யா." என்று நடிகை மீரா மிதுன் பாராட்டுவது போல கேப்பில் கடா வெட்ட முயன்றதை பலரும் கவனிக்கவில்லை.
Share it with your Friends