உலகக்கோப்பை வரலாற்று சாதனயை சமன் செய்த HIT மேன் RO"HIT" SHARMA..!


2019 ஐ.சி.சி உலகக் கோப்பை தொடர் கடந்த மே 30 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து அணி வீரர்களும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல சாதனைகளை படைத்து வருகின்றனர். 

45 லீக் போட்டிகளில் இதுவரை 39 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் 40 வது லீக் போட்டியில், இந்திய அணியும் பங்களாதேஷ் அணியும் பர்மிங்காம்மில் உள்ள எட்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. 

டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது இந்திய அணி. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ரோஹித் ஷர்மா-வும், கே.எல்.ராகுலும் அணியின் ஸ்கோரை கட கடவென உயர்த்தினர். 

இந்த போட்டியில் ரோஹித் ஷர்மா சதம் விளாசினார். ஆனால், அணியின் ஸ்கோர் 180-ஆக இருந்த போது சௌமியா சர்கார் பந்தை வீச லிடான் தாஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 


Share it with your Friends