வெடித்து சிதறிய KFC - அதிர்ச்சியில் உறைய வைக்கும் காட்சி - காரணம் என்ன தெரியுமா..?


பிரபல சிக்கன் உணவுகளை விற்கும் நிறுவனம் KFC. உலக அளவில் இந்த ரெஸ்டாரெண்டிற்கு தனி ரசிகர் வட்டம் உள்ளது. எச்சில் ஊற வைக்கும் சுவையுடன் இங்கு சிக்கன் உணவு வகைகள் உள்ளன.

ஒரு முறை முயற்சி செய்து பார்ப்போம் என்று சென்றவர்களில் 100-க்கு 89 பேர் KFC சிக்கன்களுக்கு அடிமையாகியுள்ளனர். காரணம், இதில் மீண்டும் சாப்பிட வேண்டும் என்ற என்னத்தை கொடுக்கும் எதோ ஒரு வேதிப்பொருள் கலக்கப்படுகிறது என்பது மட்டும் உண்மை.


ஆனால், அது என்ன வேதிப்பொருள் என்பது இதுவரை யாருக்கும் தெரியாத ரகசியம். உலகிலேயே அதிகம் பாதுகாக்கப்பட்ட ரெசிபி செய்யும் முறை என்று இந்த நிறுவனம் சுயதம்பட்டம் அடித்துக்கொள்கிறது. 

ஆனால், நாளுக்கு நாள் KFC சிக்கன்களை சாப்பிடுபவர்கள் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே தான் போகின்றது.

இந்நிலையில், வடக்கு கரோலினா மாகணத்தில் அமைந்துள்ள ஒரு KFC ரெஸ்டாரண்ட் இரவு 12:33 மணியளவில் வெடித்து சிதறி தரை மட்டமாகிவிட்டது. இதனை எதிரே இருந்த மருந்து கடை ஒன்றில் பொருத்தப்பட்ட CCTV கேமரா அப்படியே பதிவு செய்துள்ளது. 

இதற்கு,பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால், வழக்கமாக 10:30 மணிக்கு அடைக்கப்படும் இந்த ரெஸ்டாரன்ட் இரண்டு மணி நேரம் கழித்து தான் வெடித்து சிதறியுள்ளது. 

எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு தான் இதற்கு காரணமாக இருந்திருக்க முடியும். ஒருவேளை, கடையை மூடும் மமுன்பு கேஸ் அடுப்பை முறையாக அணைக்காமல் ஊழியர்கள் சென்றிருக்கலாம் எனவும் கூறுகிறார்கள். 

ஆனால், இதனைகேள்விப்பட்ட நெட்டிசன்கள், கோழி என்று கூறி விட்டு எலியைபொரித்து கொடுத்தீர்களே.? அந்தஎலியின் ஆத்மா தான் இதனை செய்திருக்கும் என கிண்டலடித்து வருகிறார்கள். 

இன்னும், பல தரப்பட்ட தாறுமாறான கலாய் விமர்சங்களை முன்வைத்து வருகிறார்கள் ரசிகர்கள். இதில் நல்ல விஷயம் என்னவென்றால், வெடி விபத்து நடக்கும் போது அந்த கட்டத்தின் அருகில் யாரும் இல்லை என்பதும், சாலையில் கூட ஒருவரும் இல்லை என்பது தான்.

இதோ அந்த வீடியோ,

Share it with your Friends