NKP ட்ரெய்லரை ஒளிபரப்ப வேண்டும் என்பது சட்டமா..? - அஜித் ரசிகரால் கடுப்பில் பிரபல திரையரங்கம்


நடிகர் அஜித்திற்கு இருக்கும் ரசிகர் பட்டாளத்தை பற்றி நாம் சொல்லி தெரியவேண்டியதில்லை. அவ்வளவு வெறித்தனமான ரசிகர் பட்டாளம். இந்நிலையில், அஜித் ரசிகர் ஒருவர் படம் பார்க்க சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றிற்கு ஸ்பைடர் மேன் படத்தை பார்க்க சென்றுள்ளார்.

அந்தபடத்தின் இடைவேளையில் நடிகர் அஜித்தின் NKP படத்தின் ட்ரெய்லரை ஒளிபரப்பவில்லை போலிருக்கிறது. இதனால் கடுப்பான ரசிகர் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த திரையரங்கிடம் நீங்கள் ஒரு விஜய் ரசிகர் என்பதால் தான் அஜித் படத்தின் ட்ரெய்லரை ஒளிபரப்பு செய்யவில்லை இதற்கு உங்கள் பதில் என்ன என்று கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த அந்த திரையரங்கின் உரிமையாளர். ஒரு ஹாலிவுட் படத்தின் இன்டர்வெல்லில் ஹாலிவுட் படத்தின் ட்ரெய்லரை ஒளிபரப்புவது தான் வழக்கம். அதே சமயம், NKP படத்தின் ட்ரெய்லரை ஒளிபரப்பிதான் ஆக வேண்டும் என்று சட்டம் ஒன்றும் இல்லை. மேலும், நான் ரஜினி ரசிகன். அதனை என்னுடைய தொழிலுடன் சம்பத்தபடுத்த நான் எப்போதும் நினைத்தது கிடையாது என கோபமாக பதிலளைதுள்ளர்.