60 வயது நடிகருடன் இதுவரை இல்லாத கவர்ச்சி களத்தில் ஜோடியாகவுள்ள நடிகை த்ரிஷா..!


கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகில் நாயகியாக நீடித்து நடித்து வரும் திரிஷா, இந்த ஆண்டு பொங்கல் அன்று வெளியான ‘பேட்ட’ திரைப்படத்தில் ரஜினியின் ஜோடியாக நடித்து தனது நீண்டநாள் நிறைவேறாத ஆசையை நிறைவேற்றிக்கொண்டார்.

2002ல் கதாநாயகியாக அறிமுகமாகி 35 வயது நிரம்பிய நிலையில், 60 வயதாகும் நடிகர் மோகன்லால் நடிக்கவிருக்கும் புதுப்படத்தில் அவரது ஜோடியாக திரிஷா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. 


மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான வெற்றித் திரைப்படம் ‘த்ரிஷ்யம்’. இந்தப் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் மீண்டும் மோகன்லால் நடிக்கும் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும் இந்தப் படத்தில் மோகன்லால் ஜோடியாக திரிஷாவை நடிக்கவைக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  


‘த்ரிஷ்யம்’ போலவே இந்த புதிய படமும் திகிலூட்டும் திரைப்படமாக இருக்கும் என்றும் இந்த படத்தில் திரிஷா இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியில் இறங்கி கலக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. 

இந்தப் படம் திரிஷாவின் இரண்டாவது மலையாளப் படமாகும். ஏற்கெனவே இவர் நிவின் பாலியுடன் ‘ஹே ஜூடு’ என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

Share it with your Friends