குடும்பப்பாங்காக நடித்து வந்த இந்துஜா-வா இப்படி ஒரு காட்சியில் நடித்துள்ளார் - ரசிகர்கள் ஷாக்


ஆண்மை தவறேல் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் துருவா. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற அந்த படத்தில் துருவாவின் நடிப்புக்கும் நல்ல பெயர் கிடைத்தது. 

அடுத்து துருவா சூப்பர் டுப்பர் என்ற படத்தில் நடித்துள்ளார். வரும் 20ந்தேதி வெளியாக இருக்கும் சூப்பர் டூப்பர் படத்தில் கதாநாயகியாக இந்துஜா நடித்துள்ளார். இதுவரை குடும்ப பாங்கான வேடங்களில் மட்டுமே நடித்துவந்த இந்துஜா இந்த படத்தில் முதல் முறையாக கவர்ச்சியாகவும் நடித்து இருக்கிறார். 


இந்த படம் குறித்து படத்தின் ஹீரோ கூறுகையில், இது கமர்ஷியல் படமாக இருந்தாலும் கதை வித்தியாசமாக இருக்கும். படம் முழுக்க ரசிகர்களை சிரிக்க வைக்கும். படத்தில் ஒரு முத்த காட்சி முக்கியமான திருப்புமுனை காட்சியாக இருக்கும். 


அந்த முத்த காட்சி எடுக்க மட்டுமே ஒருநாள் முழுக்க ஆனது. 15 டேக்குகளுக்கு மேல் போனது. இந்துஜா மாடர்ன் பெண்ணாக வருகிறார். ஒரு குத்து பாடலிலும் ஆடி இருக்கிறார். ஒரு வளரும் நடிகையாக தன்னைப் புரிந்து கொண்டு சூப்பர் டூப்பர் பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்’. இவ்வாறு அவர் கூறினார். 

இதனை அறிந்த ரசிகர்கள் குடும்பப்பாங்காக நடித்து வந்த இந்துஜாவா முத்தக்காட்சியில் நடித்துள்ளார் என்று ஷாக் ஆகித்தான் கிடக்கிறார்கள்.

குடும்பப்பாங்காக நடித்து வந்த இந்துஜா-வா இப்படி ஒரு காட்சியில் நடித்துள்ளார் - ரசிகர்கள் ஷாக் குடும்பப்பாங்காக நடித்து வந்த இந்துஜா-வா இப்படி ஒரு காட்சியில் நடித்துள்ளார் - ரசிகர்கள் ஷாக் Reviewed by Tamizhakam on September 12, 2019 Rating: 5
Powered by Blogger.