இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் "சுப்ரமணியபுரம்" நடிகை ஸ்வாதி..!


தமிழ் திரையுலகில் 'சுப்ரமணியபுரம்' படத்தில் நாயகியாக அறிமுகமானவர் தெலுங்கு நடிகை சுவாதி. இவர் தமிழில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரா', 'வடகறி', 'யட்சன்', 'யாக்கை' என சில படங்களில் நடித்து இருக்கிறார். 

தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ள சுவாதிக்கு, இந்த ஆண்டு படங்கள் வாய்ப்பு இல்லாததால் சுவாதிக்கு விரைவில் திருமணத்தை முடிக்கப் பெற்றோர்கள் அவசரப்பட்டனர். 

இந்த நிலையில் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் விமானியாக பணியாற்றும் விகாஸ் என்பவருக்கும், சுவாதிக்கும் நட்பு ஏற்பட்டது, அந்த நட்பு நாளடைவில் அவர்களுக்கு காதலாக மலர்ந்தது.

இவர்களது திருணமத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்ததையடுத்து, சுவாதி-விகாஸ் திருமணம் சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்து முடிந்தது.

திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த சுவாதி இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, கன்னட படம் ஒன்றின் மூலம் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுக்கவுள்ள அவர் அந்த படத்தில் இதுவரை இல்லாத கவர்ச்சி காட்சிகளில் நடித்துள்ளராம். 

குடும்பப்பாங்கினியாக நடித்து வந்த நடிகை ஸ்வாதியா இப்படி கவர்ச்சி காட்டி நடிக்க சம்மதித்தார் என்று ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் கிடக்கிறார்கள். 
Share it with your Friends