"இவ்வளவு தலைக்கனம் ஆவதுமா..!" - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் குறித்து விளாசும் ரசிகர்கள்


அறிமுக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஓ மை கடவுளே’. இப்படத்தை திரைப்படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது. 

இப்படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாகவும், ரித்திகா சிங் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள். இந்நிலையில், பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்து புகழ் பெற்ற வாணி போஜன், இப்படத்தில் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். 

ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விளம்பர பட நடிகையாக வாழ்கையை தொடங்கிய வாணி போஜன் ஒரு மாடல் அழகி ஆவார். விளம்பர படங்களை தொடர்ந்து சீரியலில் நடிக்க துவங்கிய இவர் இப்போது சினிமாவிலும் நடிக்க தொடங்கியுள்ளார். 

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட ஒரு புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு தலைக்கனம் கூடாது என கூறி வருகிறார்கள். 

பிரபல சமூகவலைத்தளம் ஒன்றில் ஒரு மில்லியன் ஃபாலோவர்களை பெற்று விட்டேன் எனmமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார் வாணி போஜன். ஆனால்,aஅவர் ஒருவரை கூட ஃபாலோவ் செய்யவில்லை என்பது அந்த புகைப்படம் மூலம் தெரிகின்றது. 

இதனை பார்த்த ரசிகர்கள், வளரும் வரைtதனக்கு பிடித்தவர்களை ஃபாலோவ் செய்யும் நபர்கள் வளர்ந்த பிறகு எதோ அவர்கள் தான் கடவுள் போல ஒருவரையும் ஃபாலோவ் வெய்வதில்லை. ரசிகர்களை ஃபாலோவ் செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை. சக நடிகர், நடிகைகளை கூட ஃபாலோவ் செய்வதில்லை.

இதனை பார்த்த ரசிகர்கள் இது தலைக்கணம் என்றும் இந்த தலைக்கணமே உங்களை கெடுத்துவிடும் எனவும் கூறி வருகிறார்கள்.

Share it with your Friends