ஆத்தாடி..! - சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் இவரா..? - பேய் அறைந்தது போல இருக்கும் ரசிகர்கள்..!


இயக்குனர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘காப்பான்'. பிரதமரின் பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா இந்த படத்தில் நடித்திருந்தார். 

இவருடண் ஆர்யா, சாயிஷா, மோகன்லால், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். என்.ஜி.கே படம் சற்று எதிர்மறையான விமர்சனங்களை பெற்றாலும் காப்பான் திரைப்படம் ஹிட் என்று சொல்ல முடியா விட்டால் கூட பெரும்பான்மையான மக்கள் பாராட்டும் படமாகவும், சூர்யா ரசிகர்களை திருப்தி படுத்தும் விதமாகவும் அமைந்திருந்து. 

இந்த படத்தை அடுத்து சூர்யா ‘இறுதி சுற்று' படத்தை இயக்கிய சுதா கொங்காரா இயக்கதில் ‘சூரரை போற்று' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அபர்னா பாலமுரளி, கருணாஸ், ஜாக்கி ஷெராஃப், மோகன் பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் பொங்கல் விடுமுறையில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், இந்த படத்தை தொடர்ந்து சூர்யா அடுத்து நடிக்கவுள்ள படத்தின் இயக்குனர் யார் என்ற விபரம் வெளியாகியுள்ளது. இயக்குனரின் பெயரை கேட்ட சூர்யா ரசிகர்கள் பேய் அறைந்தது போல தான் கிடக்கிறார்கள். 

ஆம், அந்த இயக்குனர் வேறு யாருமல்ல நம்ம ஹரி தான். இவர் இயக்கத்தில், ஆறு, வேல், சிங்கம்,சிங்கம் 2,சிங்கம் 3 என ஐந்து படங்களில் நடித்துள்ளார் சூர்யா. அதில், 2010-ம் ஆண்டு வெளியான சிங்கம் திரைபடம் ஹிட் அடித்தது. 

தொடர்ந்து, சிங்கம் 2, சிங்கம் 3 என படங்களை எடுத்தார்கள். ஆனால், இரண்டு படங்களும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில், மீண்டும் ஹரி, சூர்யா கூட்டணிaஅமைந்திருப்பதால் எங்கே சிங்கம் 4  எடுக்கபோகிறேன் என்று கேமராவை தூக்கிக்கொண்டு கிளம்பிவிடுவார்களோ என்ற பீதியில் தான் பேய் அறைந்தது போல இருக்கிறார்கள் ரசிகர்கள்.

ரசிகர்களுக்கு இப்போது இருக்கும் ஆறுதலான விஷயம் என்னவென்றால் ஹரி, சூர்யா மீண்டும் இணைகிறார்கள். ஆனால், அது சிங்கம் சீரிஸா..? அல்லது புதிய கதையா.? என்ற தகவல் வெளியாகாமல் இருப்பது தான்.
Share it with your Friends