13 வருடங்களுக்கு பிறகு முன்னணி நடிகருக்கு ஜோடியாகும் நடிகை திரிஷா..!


தமிழ், தெலுங்கில் நம்பர் 1 நாயகியாக இருந்த த்ரிஷா, சமீபகாலமாக தமிழில் மட்டுமே, கதையின் நாயகியாக நடித்து வருகிறார். தற்போது, ‛‛பரமபத விளையாட்டு, ராங்கி, சுகர்'' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 

இந்த நிலையில், கொரட்டல்ல சிவா இயக்கும் சிரஞ்சீவியின் 152வது படத்தில் த்ரிஷா நடிப்பதாக சில மாதங்களாகவே செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனாலும் அது உறுதிப்படுத்தப்படாத செய்தியாக இருந்தது. 

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இயக்குநர் கொரட்டல்ல சிவாவை சந்தித்து பேசினார் த்ரிஷா. இந்த சந்திப்புக்குப்பிறகு சிரஞ்சீவியின் 152வது படத்தில் திரிஷா நடிப்பது உறுதியாகி விட்டதாக சொல்லப்படுகிறது. 

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். இதன்மூலம் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் தெலுங்கு சினிமாவில் நுழைகிறார் த்ரிஷா. 

த்ரிஷா, இதற்கு முன்பு 2006ல் முருகாஸ் இயக்கத்தில் சிரஞ்சீவி உடன் ‛ஸ்டாலின்' என்ற படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்ட தட்ட 13 வருடங்கள் கழித்து தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடன் ஜோடி சேர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

--Advertisement--
Share it with your Friends