25 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் நடிக்க மறுத்த முன்னணி நடிகர்..! - உச் கொட்டும் ரசிகர்கள்..!


நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் ஹெச்.வினோத் ஆகியோர் கூட்டணியில் இரண்டாவதாக உருவாகவுள்ள படம் "வலிமை". படத்தின் பூஜையின் போதே வலிமை என்ற பெயரையும் படக்குழு அறிவித்துவிட்டனர். 

இப்படத்திற்காக அஜித் பிட்டாக மாற நேரம் எடுப்பதால் இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லை. இந்த நிலையில் தான் படம் குறித்து ஒரு தகவல வெளியாகி ரசிகர்களை உச் கொட்ட வைத்துள்ளது. 

ஆம், தனி ஒருவன் என்ற படம் மூலம் வில்லனாக கலக்கிய நடிகர் அரவிந்த் சாமியை வலிமை படத்தில் நடிக்க கேட்டுள்ளனர். 


ஆனால், மறைந்த முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அம்மா அவர்களின் அவர்களின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க கமிட்டாகி இருப்பதால் வேறு வழியே இல்லாமல் இப்படத்தில் நடிக்க மறுத்துள்ளாராம். அஜித்துடன் மட்டும் இவர் நடித்தால் செம மாஸாக இருக்குமே என ரசிகர்கள் வருந்துகின்றனர்.

ஏற்கனவே, கடந்த 1994-ம் ஆண்டு வெளியான பாசமலர்கள்என்றபடத்தில் இருவரும் சேர்ந்து நடித்திருந்தார்கள்.  அதன் பிறகு, 25 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் இருவரும் ஒரு படத்தில் கூட சேர்ந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

--Advertisement--
Share it with your Friends