கமல்60 மேடையில் குச்சி கொளுத்தி போட்ட பிறகு வீட்டில் வந்த ரியாக்க்ஷன்..! - விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி பேட்டி.!


நடிகர் கமல்ஹாசன் சினிமா, அரசியல் என இரட்டை மாட்டு சவாரி செய்து வருகிறார். திரைத்துறைக்கு வந்து 60 ஆண்டுகளை நிறைவு செய்த கமல்ஹாசனுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக திரையுலகில் உள்ள முக்கிய பிரபலங்கள் ஒன்று கூடி கமல் 60 என்ற விழாவை ஏற்பாடு செய்திருந்தனர். 

இந்த விழாவில் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் பலரும் கலந்து கொண்டு கமலுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். இதில், நடிகர் விஜய்யின் தந்தையும், பிரபல இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரும் கலந்து கொண்டார். 

அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரும் பதவிக்காக அரசியலுக்கு வரவில்லை. நாட்டு மக்களின் நலனுக்காகவே அரசியலுக்கு வந்துள்ளனர். இருவரும் தனித்தனியாக இல்லாமல் ஒன்றாக சேர்ந்து பயணிக்க வேண்டும் என்று குச்சி கொளுத்தி போட்டார். 

இது ரசிகர்கள் மத்தியில் பேச்சை கிளப்பியது. இந்த நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிய அவருக்கு  வீட்டில் உள்ளவர்களை சமாளிக்க ரொம்ப கஷ்டமாக இருந்ததாம். "அன்று இரவு சமாளிப்பது கஷ்டமாக தான் இருந்தது. ஆனால், அதற்கு அடுத்த நாள் அவர்களே என்னை பாராட்டினார்கள். நீங்க சொன்னது நடந்துவிட்டது என்று ரஜினி, கமல் ஆகிய இருவரும் தேவைப்பட்டால் கூட்டணி அமைப்போம் என்று கொடுத்த பேட்டியை பற்றி கூறினார்கள்" என எஸ்ஏசி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, அந்த நிகழ்ச்சியில் நான் பேசுமுன்பு கமல்ஹாசனிடம் 'அரசியல் பேசலாமா?' என்று கேட்டு அவர் சரி என்று சொன்னபிறகு தான் நான் பேசினேன் என்றும் கூறியுள்ளார் அவர்.

--Advertisement--
Share it with your Friends