வெறித்தனத்தை தொடர்ந்து சம்பவம் செய்யவுள்ள நடிகர் விஜய்..! - தளபதி 64 அப்டேட்.!


நடிகர் விஜய் தன்னுடைய உறவினர் ஒருவரின் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தளபதி 64 என்ற படத்தில் நடித்து வருகிறார். 

இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள இந்த படத்தில் நடிகை மாளவிகா மோகனனன் ஹீரோயினாக நடிக்க பிகில் படத்தின் பணியாற்றிய பெரும்பாலான நடிகர்கள் இதிலும் பணியாற்றுகிறார்கள். 

வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். பிகில் படத்தில் வெறித்தனம் என்ற பாடலை பாடியிருந்த நடிகர் விஜய் இந்த படத்தில் "சம்பவம்" என்ற பாடலை பாடவுள்ளார். 

ஏற்கனவே, கத்தி படத்தில் "செல்ஃபி புள்ள" என்ற பாடலை பாடியிருந்தார். இந்த பாடல் பட்டி தொட்டியெங்கும் ஹிட் அடித்தது. அதனை தொடர்ந்து, இரண்டாவது முறையாக அனிருத் இசையில் விஜய் பாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

--Advertisement--
Share it with your Friends