காதலித்து கர்ப்பம் ஆக்கி விட்டு இறுதியில் ட்விஸ்ட் அடித்த காதலன்..!


திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் அருகே பச்சமலை பகுதியின் தண்ணீர்பள்ளம் என்ற கிராமத்தை சேர்ந்தவன் பிரதாப். பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள இவன் அதே பகுதியில் வசித்து வரும் சூரியா என்ற இளம்பெண்ணுடன் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. 

ஒரு கட்டத்தில் நெருக்கம் ஓவராகி சூரியா கர்ப்பம் ஆகியுள்ளார். கர்ப்பிணி ஆகி 6 மாதம் ஆன நிலையில்தான், இந்த விஷயம் சூரியாவின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. 

இதனால் ஷாக் ஆன அவர்கள் மகளின் நிலைமைக்கு காரணமாக, பிரதாப்பிடம் சென்று, தங்களது மகளை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளனர். 

ஆனால் அவன் தன்னால் கர்பமான இளம்பெண் சூரியாவை திருமணம் செய்ய மறுத்துள்ளான். அதன்பின்னர், வேறு வழியே இல்லாமல் பெண்ணின் பெற்றோர் சென்று காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

பின்னர் நடந்த விசாரணையில் இருவரும் மேஜர் என்று தெரியவந்துள்ளது. இதன்பிறகு, பிரதாப்பை அழைத்து போலீசார் தங்கள் பாணியில் அறிவுரை வழங்கியுள்ளனர். 

இதில் மனம் மாறிய இளைஞர் பிரதாப், கோவிலில் வைத்து தன்னால் கர்ப்பமான சூரியாவை திருமணம் செய்துகொண்டு மனைவியாக ஏற்றுக்கொண்டார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

--Advertisement--
Share it with your Friends