ரெண்டாவது கல்யாணத்துக்கு தயாரான தொகுப்பாளினி - நடிகருடன் ஓவர் நெருக்கம்..!


பிரபல சின்னத்திரை தொகுப்பாளினி பிரபல நடிகர் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளவுள்ளார் என்று கூறுகிறார்கள். சின்னத்திரையில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக இருந்து வரும் அவருக்கு சினிமா வட்டாரங்கள் அனைத்தும் அத்துப்படி. 

அந்த தொடர்பால் இரவு நேர பார்ட்டி, பப் என சுதந்திர பறவையாக பறந்து வந்த அவர் தனது நண்பர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். ஆனால், திருமணத்திற்கு பிறகு பார்ட்டி, பப், இரவு நேரத்தில் தாமதமாக வீட்டிற்கு வருவது என அம்மணியின் அட்டகாசம் தொடர்ந்துள்ளது. 

மாலை நேரத்திலேயே தொலைக்காட்சி அலுவலகத்தில் இருந்து வெளியே வரும் அம்மணி இரவு ஒரு மணி , இரண்டு மணி வரை எங்கு செல்கிறார். என்ன செய்கிறார் என்று தெரியாமல் இருந்த கணவர் வீட்டாருக்கு அம்மணியின் ஆட்டம், பாட்டம் தெரிய வர விஷயம் விவகராமகி, விவகாரம் விவாகரத்து வரை இழுத்து சென்று விட்டது. விவாகரத்து பெற்ற பின்பும் அம்மணி சுதந்திர பறவையாக சுற்றி வருகிறார். 

இந்நிலையில், பிரபல நடிகர் ஒருவருடன் ஓவர் நெருக்கமாக இருக்கிறாராம் அம்மணி. அந்த நடிகரும் அம்மணியின் நட்பிலும், அன்பிலும் மயங்கி அவருக்கு ஒத்தாசையாக இருகிறாராம். மேலும், விவகரத்தானவர் என்பதால் அவருக்கு ஆதரவாக துணையாக இருப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளாராம். 

நடிகரின் வீடு ஹைதராபாத்தில் இருந்தாலும் வார இறுதி நாட்களிலும், படப்பிடிப்பு இல்லாத நாட்களிலும் அம்மணியை சந்திக்க கிளம்பி வந்து விடுகிறாராம் நடிகர். அம்மணியின் அழகால் மயங்கிகிடக்கும் அந்த நடிகருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. 

இருவரும் காட்டி வரும் நெருக்கம் விரைவில் திருமணம் வரை இட்டுச்செல்லும் என்று கூறுகிறார்கள். இருவருக்கும் கிட்ட தட்ட ஒரே வயது என்பதால் நடிகரின் வீட்டில் மௌனம் காக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். 

ஆனால், ஜாதகம், ஜோதிடம் போன்றவற்றில் அதீத நம்பிக்கையுள்ளவர்கள் நடிகர் வீட்டார். ஏற்கனவே, திருமணம் ஆகி விவாகரத்து ஆன பெண்ணை திருமணம் செய்தால் தான் வாழ்வு சிறக்கும் என்று நடிகரின் ஜாதகத்தில் இருப்பதால் விரைவில் திருமண அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறுகிறார்கள்.

--Advertisement--
Share it with your Friends