எனக்கு விபூதி அடிக்க பாத்த இல்ல..? - "சும்மா கிழி" பாடலை கிழிக்கும் ரசிகர்கள்..! - எங்கிருந்து சுட்டிருக்கிறார் பாருங்க..!


ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. இதற்கான இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. 

ஆக்ஷன் வகையில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அவர் இசையில் உருவாகியுள்ள பாடல்களை வரும் 7-ம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். 

அதற்கு முன்பாக நேற்று மாலை படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை சிங்கில் ட்ரேக் முறையில் வெளியிட திட்டமிட்டிருந்தனர். அதன்படி, பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். 'நான் தான்டா இனிமேலு' என தொடங்கும் இந்தப் பாடல் தான் படத்தில் அறிமுக பாடல் என்று கூறுகிறார்கள். 

வழக்கம் போல அனிருத் பாடல்கள் என்றாலே காப்பியடிக்கபட்டது என்ற சர்ச்சை வலம் வரும். அதே போல சர்ச்சையில் சிக்கியுள்ளார் "சும்மா கிழி" பாடல். இந்த பாடலுக்கு இசை அமைத்துள்ள இசையமைப்பாளர் அனிருத், பாடலுக்கு உரிய மெட்டை பல வருடங்களுக்கு முன்பு வெளியான அய்யப்ப சுவாமி ஆல்பத்தில் இருந்து காப்பி அடித்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. 


மற்றொரு தரப்போ இது பல வருடங்களுக்கு முன்பு தேவா இசையில் வெளியாகி ஹிட் அடித்த வைகாசிபொறந்தாச்சு படத்தில் இடம்பெற்ற தண்ணி குடம் எடுத்து என்ற பாடலின் மெட்டு என்று சுட்டிக்காட்டுகின்றனர். 

ஏற்கனவே, அனிருத் இசையில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் பாடல் ஒன்று வெளி நாட்டு ஆல்பத்தில் இருந்து சுடப்பட்டது என்று ரிப்போர்ட் ஆனதால் அந்த பாடல் யூடியூப்பில் இருந்தே நீக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

--Advertisement--
Share it with your Friends